Taittirîyaka-Upanishad: Part :3:9
3. “அன்னத்தை மிகுதியும் உண்டாக்க வேண்டும். அது விரதம். பூமியும் ஆகாசமும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. பூமியில் ஆகாசம் ஒடுங்கி நிற்கும். ஆகாசத்தில் பூமி ஒடுங்கி நிற்கும்… கீர்த்தியால் மகானாகிறான்.
Interpretation:
‘பூமி’ என்பது காற்று, மண், நீர் மற்றும் நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஒவ்வொரு சரீரமும் பூமியின் அம்சமே ஆகும். பூமியில் விளையும் உணவுப் பயிர்கள் யாவும், அதே அம்சங்கள் அடங்கிய சரீரத்துக்கு, பிராணன் மற்றும் நீருடன் கலந்த உணவாக ஆகிறது. இவ்வாறு அன்னமயமான சரீரம், ஒவ்வொரு சரீரத்துள்ளும் விளங்கிக் கொண்டிருக்கும் ஆகாசத்துக்கு உணவாகின்றது. பூமியும் ஆகாசமும் ஒன்றிலொன்று அடங்கப்பெற்ற பின் அதன் தன்மைகள் முழுவதும் மறைந்து அங்கு அன்னமே நிலை பெறுகிறது.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”
என்பது திருமூலர் திருமந்திரம்:
அதாவது பூமியின் அம்சங்களை கொண்ட இச் சரீரம், முறைப்படுத்தப்பட்ட பிராணனுடன் கலந்த நீர் மற்றும் மண்ணில் விளையும் பயிர்கள் இவற்றை உணவாக உட்க்கொண்டு மிகுதியாக வளர்ந்தது, அதனுள் குடிகொண்டிருக்கும் உயிர் ஆகிய (சித்) ஆகாசத்திற்கு உணவாகி உயிரையும் வளர்க்கிறது. விரதம் என்பதும் இதுவேயாம் !
சாய்ராம்.


