You Are That! – “Conservator of energy”

 Taittirîyaka-Upanishad: Part :3:8 

2.  “அன்னத்தை எறியாதே. அது விரதம். நீரும் நெருப்பும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. நீரில் நெருப்பு ஒடுங்கி நிற்கும். நெருப்பில் நீர் ஒடுங்கி நிற்கும்… கீர்த்தியால் மகானாகிறான்”. 


Interpretation:

‘நீர்’ எவ்வாறு எறியப்பட்ட  அன்னமாக ஆகின்றது?

சரீரத்துக்கு முதல் உணவாக இருக்கும்  பிராணன் இகழப்பட்ட உணவாகவே உண்ணப்படின் ! அச் சரீரத்தில் ஓடும் இரத்த உற்பத்திக்கு காரணமாய் இருக்கும் உட்க்கொள்ளப் படும் நீரும், பயனற்ற விரைய விந்து சக்தியாக மாறி சரீரத்திலிருந்து எறியப்பட்ட உணவாக ஆகிவிடும். 

அதாவது “பிராணன், மனம் என்னும் இவ்விரண்டுக்கும் உற்பத்தி ஸ்தானம் ஒன்றே, பிராணன் அடங்க மனம் அடங்கும்” என்பது பகவான் ரமண மகரிஷியின் வாக்கு. ஆகையால் ஒருவரின்  பிராணன்  இகழப்பட்ட    உணவாகவே உண்ணப்படின், அதன் விளைவாக மனமும் அடக்கமற்றுப் போய்விடும். கட்டுப்பாடு அற்ற மனத்தால்  சிற்றின்பத்தில் அதிக நாட்டம் ஏற்பட்ட , அதன் காரணம் இரத்தம், விந்தின் சக்தியாய் விரையமாகிக் கொண்டேயிருக்கும். அதாவது இரத்த உற்பத்திக்கு ஏதுவாக உட்க்கொள்ளப் படும் நீர் இகழப்பட்ட பிராணனுடன் சேர்ந்தே சரீரத்திற்கு உணவாகிப் போவதால், இஃது  பயனற்றதாய் அச் சரீரத்திலிருந்து எறியப்பட்ட உணவாய் ஆகிக் கொண்டேயிருக்கும். 

மாறாக  இச் சரீரத்தில், முறையாக உண்ணப்படும் பிராணச் சப்தத்துடன் நீரும் கலந்து உண்ணப்படும் போது, அஃது வியாபித்து சரீரத்தில் உள்ள நெருப்புக்கு உணவாகி, நீரும் நெருப்பும் ஒன்றிலொன்று அடங்கப்பெறுகிறது.  நீரும் நெருப்பும் ஒன்றிலொன்று அடங்கப்பெற்ற பின் அதன் தன்மைகள் முழுவதும் மறைந்து அங்கு அன்னமே நிலை பெறுகிறது.

இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி “அன்னம் பிரம்ம மயம்” ஆக மாறுகிறது. எவன் இங்கனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை  அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எய்துகிறான்.  அதாவது சரீரம் சமன் நிலை அடைந்து, கூடவே மனமும் பண்பட்டு போய்விடுவதால் சரீரத்தில் இருந்து முறையற்று சக்தி வெளியேறுதல் என்பதும் நிகழவே நிகழாது.  விரதம் என்பதும் இதுவேயாம் !

சாய்ராம்.

Leave a comment