You Are That! – “Shines as knowledge”

“ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்”. (குறள் 714:)
பால்: பொருட்பால்: அதிகாரம்: அவையறிதல்

பொதுப்பொருள்:

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும்,
அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

மெய்ப்பொருள்:

“ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்” திருமூலர்:

“உனக்குநம் அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி” வள்ளல் பெருமான்:

அதாவது ஒவ்வொருவர் அகத்துள்ளேயும் தூய அறிவானது சக்தி வடிவாக, ஒளிரக்கூடிய தன்மை கொண்டதாய் விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

எனினும் யார் இவ் அக அறிவொளியை நாடுகின்றாரோ அத்தகைவரின் முன்பு,

‘ஒளியார்முன் ஒள்ளிய ராதலாய்’ இருந்து அவர்களின் அறிவை பிரகாசிக்கச் செய்கின்றது.
அவ்வாறு நாடாமல் அதற்கு புறம்பான வெளிவழியே அறிவை நாடிச் செல்லும் அறிவில்லாத வெளியார்முன், அஃதும் வெண்மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியன் போல்,

ஒளிராமலேயே இருந்ததும் விடுகின்றது என்பதாக பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்.

Leave a comment