“வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் ஐயறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி” (203)
‘ஐயறிவு‘ என்பதை பொதுவாக ‘மெய் வாய் கண் செவி நாசி‘ என்னும் ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் ‘அறிவு‘ எனக்கொள்ளலாம். அதாவது ஒன்றை ‘பார்த்து அறிதல்‘ அல்லது செவி வழியாக ஒன்றை ‘கேட்டு அறிதல்‘
என்பது போன்று! இஃது மனிதப்பிறவி கிடைக்கப்பெற்ற அனைவரிடமும் விளங்கிக்கொண்டிருக்கும் அறிவாகும்.
ஆயினும் இங்கு வள்ளல் பெருமான் குறிப்பிடும் ‘ஐயறிவு‘ என்பது ஐம்புலன்களின் வாயிலாக ‘ஒன்றினை‘ அறிய (அல்லது) பொருட்களின் வாயிலாக வெளிப்படும ‘அறிவு‘ அன்று!
மாறாக ‘அருளறிவு‘ ஐம்புலன்களின் வாயிலாக ஒளிரும்போது வெளிப்படும் அறிவையே ‘ஐயறிவு‘ என்று இங்கு குறிப்பிட்டுள்ளார்!!
இத்தகைய கிடைத்தற்கரிய பெரும்பேறு அருட்பெருஞ்ஜோதியால் வள்ளல் பெருமானுக்கு அருளப்பட்டதின் காரணம், பெருமானின் தேகத்தில் இருந்த ஐம்புலன்களின் வாயிலாக மட்டும் இவ் ‘ஐயறிவு‘ பிரகாசிக்கவில்லை,

வள்ளல் பெருமானின் கடைசி பேரூபதேச வரிகள்:
“இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கும் இருப்போம், திருத்திவிடுவோம், அஞ்ச வேண்டாம்”
இவ்வாறு அருட்பெருஞ்ஜோதியின் ‘அருளறிவு‘ ஐம்புலன்கள் வாயிலாக ‘ஐயறிவாய்‘ பிரகாசித்துக் கொண்டிருப்பதை உணரப் பெற்றவர்கள்…
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்“.
என்னும் வள்ளுவர் பெருமானின் குறளின் படி, இவ் வையத்துள் ‘வள்ளல் பெருமான்‘ போல வாழ்வாங்கு வாழ்ந்து வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் பட்டு போற்றப்படுவாரகள்.
தெய்வத்துள் வைக்கப் படும்“.
என்னும் வள்ளுவர் பெருமானின் குறளின் படி, இவ் வையத்துள் ‘வள்ளல் பெருமான்‘ போல வாழ்வாங்கு வாழ்ந்து வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் பட்டு போற்றப்படுவாரகள்.