You Are That! – “Even-handed grace”

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல”.
அறத்துப்பால்: கடவுள் வாழ்த்து: குறள் 4:


பொதுப்பொருள்:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
மெய்ப்பொருள்:

‘வேண்டுதல்’ எங்கிருந்து உதயமாகின்றதோ, அங்கிருந்தே அருளும் சக்தியும் பிறக்கின்றது. அதாவது,

“எங்கெங்கு இருந்துஉயிர் ஏதெது வேண்டினும்

அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி”(168)

என்று வள்ளல் பெருமான் தம் அகவலில் பாடியுள்ளப்படி,

ஒரு சக்தியின் குறைப்பாடு உணரப்படும்போது ‘வேண்டுதலாக’ எழுவது, அக்குறைபாடு நீங்கியதருணம் அஃதே அருளின் சக்தியாகவும் அங்கிருந்தே உணரப்படுகின்றது…
அதுபோல்வேண்டாமை’ என்பதும்,

“ஏங்காது உயிர்த்திரள் எங்கெங்கு இருந்தன

ஆங்காங்கு அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி”(772)

என்று வள்ளல் பெருமான் தம் மற்றொரு அகவலில் பாடியுள்ளப்படி, அச் சக்தியின் குறைபாடு உணரப்படாமலேயே இருந்து அதன்பொருட்டு

எதையும் ‘வேண்டாமை’ என்னும் நிலை உருவானாலும், ‘ஆங்காங்கும்’ இருந்து அக்குறைபாடு நீங்க சக்தியை அளித்தருளும் அருட்பெருஞ்ஜோதி…
இவ்வாறு உணரப்பெற்று ‘வேண்டினும்’ அல்லது உணரப்படாது ‘வேண்டாது’ போயினும் எஃதையும் பொருட்டெனக் கொள்ளாது, ஆங்காங்கு இருந்து அக்குறைபாடு நீங்க சக்தியை அளித்தருளும் ஜோதி வடிவான இறைவனை உணரப்பெற்றவர்களுக்கு, எங்கும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை என்பதாக பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்.

Leave a comment