“உடல்உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை. அடல்உறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி”
(அருட்பெருஞ்ஜோதி அகவல்:731)
ஒருவர் உடலில் நோயின் தாக்கம் மிகுதியானால் நோய் தொற்று அபாயம் ஏற்படும். ஆதலின் அத்தகையவரை சார்ந்த மிக மிக நெருங்கிய உறவினர்களே அவரை நெருங்குவதிற்கு தயங்குவார்கள். அவ்வாறு இருக்க இவ்வுடலில் ஊடுருவி பரவி நிற்க்கும் உயிரானது, ‘இவ்வுடல்உறு பிணியால் கெடாவகையில்’ வலிமையாக அருட்பெருஞ்ஜோதியால் காத்தருளப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது இவ் அகவலின் பொருள்.
தோற்றமாக காணப்படும் இவ்வுடல் என்பது “நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம்” என்னும் எட்டு வித பிரிவை உள்ளடக்கியது.
இவ் எட்டின் தொடர்பு இல்லாமல் இதினின்று வேறாக, உள்மூச்சு, வெளிமூச்சு என இரண்டாக பிளவுபட்டு இவ் எட்டினுள் அவ்வுடல் உருவமாகவே, அதாவது உயிர்உடல் என்பதாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக!
பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19
இவ்வாறு இருந்தும் ‘உடலில்’ உருவாகும் பிணியால், இதனுள்ளேயே வியாபித்து இயங்கிக்கொண்டிருக்கும் ‘உயிர்உடல்’ கெடாத வகையில் வடிவமைத்த அருட்பெருஞ்ஜோதியின் கருணை அது “தனிப்பெரும் கருணை”.
சாய்ராம்.


