You Are That! – “Persistent learner”

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்”. (குறள் 399:)

பால்: பொருட்பால்:அதிகாரம் : கல்வி

பொதுப்பொருள்:

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

மெய்ப்பொருள்:
ஒரு கல்வி கற்றவருக்கும் அதன் மூலம் உலகத்தவருக்கும் சம அளவில் இன்பம் அளிக்கக்கூடியதாக இருக்குமெனின், அஃது மெய்ஞானக் கல்வி ஒன்றேயாம்.
ஏனெனில் ‘மெய்’ என்பதிற்கு உண்மை,உடல், உயிர் என்று பல பொருள்கள்உள்ளது. அத்தகைய இம்மெய்யுடன் இரண்டற கலக்காத எந்தவொரு கல்வியாலும்?

கற்றவருக்கோ அல்லது அதன் மூலம் உலகத்தவருக்கோ எந்தவொரு இன்பத்தையும் அளிக்க இயலவே இயலாது. ஆதலின் இக் கல்வியை கற்றவர்கள் இன்பத்தை நாடி வெவ்வேறு வகைப்பட்ட கல்விகளை மாறி மாறி பயின்றுகொண்டே இருப்பார்கள்.
ஆனால் மெய்ஞானக் கல்வியால் ஒருவர் அடைந்த இன்பமானது, அக்கல்விதனை பயின்றவரை பயன்பெற்ற உலகத்தார் மூலம் மென்மேலும் கற்கும்படி ஊக்குவித்துக் கொண்டேயிருக்கும் என்பதாக பொருள் கொள்ளலாம்.
“கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால்

நேயம் காணவைத்தாய் இவ்வுலகம்

கானல் என்றே ஒல்லும்வகை அறிவித்தாய்

உள்ளே நின்றென் உடையானே”

அருட்ப்ரகாச வள்ளலார்.
சாய்ராம்.

Leave a comment