You Are That! – “Error free doer”

“வகையறச் சூழா தெழுதல் பகைவரைப். பாத்திப் படுப்பதோ ராறு”. (குறள் 465:)
பால்: பொருட்பால்:அதிகாரம்:தெரிந்துசெயல்வகை:

பொதுப்பொருள்:

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
மெய்ப்பொருள்:

ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் ஐம்புலன்களே பகைவர்கள் ஆகும். இவ் ஐம்புலன்களையும் வெல்லக்கூடிய ஆற்றல் என்பதும் அவரவர்களின் அகத்துள்ளேயே அடங்கபெற்றுள்ளது. இவ் ஆற்றலின் போக்கை முறையாக அறிந்து அஃதினை தனதாக்கிக் கொள்ளக்கூடிய செயல் வகைகளையும் அறியப்பெறும் முன்பே, ஐம்புலன்களையும் அடக்கியாள வேறு வழிமுறைகளை கையாண்டால்?

எவ்வாறு வளரும் பாத்தியில் களைகளை களைந்தெறியாமல் போயின் அவைகள் பன்மடங்கு வளர்ந்து பயிர்களையே நாசம் செய்துவிடுமோ, அவ்வாறே ஐம்புலன்களும் ஐம்பொறிகளாக விஸ்வரூபம் எடுத்து, அவரவர்களின் அகத்தில் இருக்கும் ஆற்றல் வெளிப்படாமலேயே செய்துவிடும்.

“எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்

இடர்கொண் டோய்ந்தனை எனினும் இனிநீ

அஞ்ச வேண்டிய தென்னை என் நெஞ்சே
அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்

நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே”.

#2/005:1 நற்றுணை விளக்கம்:

அருட்ப்ரகாச வள்ளலார்.
சாய்ராம்.

Leave a comment