“புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி.
முக்கிற் கரியார் உடைத்து“. (குறள் 277:)
பால்: அறத்துப்பால்:அதிகாரம்:கூடாவொழுக்கம்:
பொதுப்பொருள்:
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு.
மெய்ப்பொருள்.
வள்ளுவர் பெருமான் இங்கு ‘குன்றிமணி‘ விதையை உவமானப் பொருளாக ஏன் கையாண்டுள்ளார்?
குன்றிமணி என்பது சிவப்பாகவும் நுனியில் கருப்பாகவும் உள்ள ஒரு வகை அழகான விதை, எனினும் இது மிக மிக கொடிய விஷத்தன்மை கொண்ட தாவர விதை. ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றிமணி போதுமானது. இந்த குன்றிமணியை கடிக்காமல் அப்படியே விழுங்கினால் ஜீரணமாகாமல் மலத்தில் வெளியேறிவிடும். விஷமும் நம்மைத் தாக்காது, ஆனால் மென்று விழுங்கினால் மரணம் நிச்சயம்.
அதுபோல புறத்தில் மற்றவர்களுக்கு குன்றிமணி விதையைப்போல் செம்மையானவராய் (நல்லவர்களாக) காணப்பட்டாராயினும், அவர்தம்அகத்துனுள் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர்கள் (கெடுதல் நினைப்பவர்கள்), அவரின் உள்ளத்தில் மறைந்திருக்கும் கருமைநிறம் வெளிப்படும்போது…

அஃது ஏனையோரினால் ஜீரணிக்கமுடியாமல் (எவ்வாறு அப்படியே விழுங்கிய குன்றிமணி விதையைப்போல) கெடுதல் ஏதுமின்றி வெளியேறிவிட்டாலும்,
எவ்வாறு குன்றிமணி விதையை மென்று விழுங்கினால் அதன்
கொடிய விஷம் உண்பவனையே கொன்று விடுக்கின்றதோ, அவ்வாறே இத்தகையவர் தம் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த கருமை நிறத்தை ஒத்த தீய எண்ணங்களை மென்று மென்று விழுங்கிகொண்டே இருந்ததின் காரணம், அஃது அவர்களை கொல்லாமல் கொன்று கொண்டேயிருக்கும் என்பதாக பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்.