You Are That! – “The breath of all breath”

“எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து”

துன்னியார் துன்னிச் செயின்.

குறள் 494:
பொதுப்பொருள்:

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.



மெய்ப்பொருள்:

ஒவ்வொருவருக்கும் வெல்லமுடியாத பகைவர் என்பது அவரவர்களின் கட்டுக்கடங்காத மனமே ஆகும். மனத்தைப் பற்றி பகவான் ரமணமஹரிஷியின் கூற்று, “பிராணன்(மூச்சு) அடங்க மனம் அடங்கும்” என்பதே!
அதாவது திருவருளால் பிராணன் அடங்கத் தக்க இடத்தை அறிந்து, அஃதினில் பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த கொடும் பகைவராகிய கட்டுக்கடங்காத அவருடைய மனம் தன் செயல்பாட்டையே இழந்து விடும். அதாவது மனமானது தன் எண்ணப்படி எண்ணும் ஆற்றலையே இழந்துவிடும். அவரின் அனுமதியின்றி மீண்டும் எண்ணங்கள் எழவே எழாது.

சாய்ராம்.

Leave a comment