“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார். வழுக்காயும் கேடீன் பது”.
பால்: அறத்துப்பால்:அதிகாரம்: அழுக்காறாமை:குறள் 165:
பொதுப்பொருள்:
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
ஒருவர் உள்ளத்தில் தோன்றும் ‘பொறாமை’ என்னும் குணம் தான் பகை உணர்வாக மாறி, புறத்தே பகைவர்களை உருவாக்கிகின்றதே அன்றி, பகைவர்களாக யாரும் தாமே உருவாகுவதில்லை. அவ்வாறு உருவான அத்தகைய பகைவர்களிடத்தும் கூட ‘இரக்க குணம்’ மேலோங்கினால், அதன் பொருட்டு இத்தகைய ‘பொறாமை’ குணம் உடையோர் தமக்கு தீங்கு ஏதும் நிகழாவண்ணம் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள இயலும் ?
ஆனால் அவர்கள் உள்ளத்தில் பகைவர்கள் தோன்றும் முன்பே வேரூன்றிய ‘பொறாமை என்னும் தீயானது’ வளர்ந்து சமாதானத்தை பொசுக்கி, அமைதியின்மையை ஏற்படுத்தி, அதன்மூலம் தீய பழக்கங்களுக்கு அடிமையாக வைத்து, தேக ஆரோக்கியத்தை குன்றச்செய்து, முடிவில் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்னும் எச்சரிக்கையோடு இக்குறளை வள்ளுவர் நமக்கு தந்துள்ளார்.
“Mudita” என்பது சமஸ்கிருதச் சொல். இதன் பொருள்
“மற்ற மனிதர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சிகளில் நாமும் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அது “முதிதா” என்று அழைக்கப்படுகிறது;
இத்தகைய பேராற்றல் கொண்டவரிடத்தில் ‘பொறாமை’ என்னும் குணம் வேரூன்றவே இயலாது ஆதலின், தமக்கும் கேடு ஏதும் நிகழாவண்ணம் தம்மை தற்காத்துக் கொள்ளலாம்.


