You Are That! – “Income to the soul”

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”.பால்: அறத்துப்பால்: அதிகாரம்: புகழ் : குறள்: 231

பொதுப்பொருள்:
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

மெய்பொருள்:
இசைதல்:என்பதிற்கு ‘கிடைத்தல்’ என்று ஒரு பொருள் உண்டு. அதாவது எவரொருவர் தமக்கு கிடைத்ததை திருவருளால் தமக்கு அளிக்கப்பட்டதாக எண்ணுகின்றாரோ, அத்தகைவருக்கு ‘ஈதல்’ என்னும் பண்பும் சேர்ந்தே அமையப் பெற்றிருக்கும். ஆதலின் இத்தகையோர் தாம் பெற்றதை ஏனையோர் பயன் பெறுவண்ணம் ஈயந்து கொண்டேயிருப்பார்கள்.


அஃது அவர்களின் உயிர் வளர ஊதியமாகி அதன் காரணம் உடம்பும் வளர்ந்து, உயிரும் வளர்ந்து அழியா தன்மையை அடைவார்கள். மேலும் ஈதலின் பொருட்டு அவர்கள் பெற்றதும் குறைவில்லாமல் வளர்ந்தது கொண்டேயிருக்கும்.

மாறாக, தமக்கு கிடைத்தது அனைத்தும் தம் முயற்சியால் மட்டுமே என்ற எண்ணம் உடையவருக்கு,ஈதல்’ என்னும் பண்பு அறவே இல்லாமலே போகும். அதன் காரணம் உயிர் வளர ஊதியமின்றி, உயிரும் அழிந்து உடம்பும் அழியும். மேலும் ஈதலின்மையால் அவர்கள் பெற்றது அவர்களுக்கும் பயன் தராமல், உலகிற்கும் பயன்படாது, வீணடிக்கப் பட்டுவிடும்.
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”.
என்பது திருமூலரின் திருமந்திரம்:
சாய்ராம்.

Leave a comment