You Are That! -“Relation grapher”

“பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:703)

அண்ணுற: என்பதிற்கு அணுகுதல், பொருந்துதல் அல்லது

பற்றுதல் என்று பொருள் உள்ளது.

பிறந்த பின்பு இயல்பாக பெண்ணிடம் பெண் தன்மையும்,

ஆணிடம் ஆண் தன்மையும் தான் குடிகொண்டிருக்கும்.

‘இன்னாருக்கு இன்னார்’ என்பது அவரவர்கள் பிறக்கும் போதே

அருள் ஜோதியால் முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும்.
அதற்க்கான தருணமும் சந்திப்பும் நிகழும்போது, அதுவரை பெண்
தன்மை மட்டுமே குடிகொண்டிருந்த பெண்ணினுள் ஆண் தன்மையும், ஆண் தன்மை மட்டுமே குடிகொண்டிருந்த ஆணினுள் பெண் தன்மையும், மாறி வெளிப்பட வைத்து ஒருவருக்கொருவர் பொருந்தும் படி வகுத்தளிப்பது அருட்பெருஞ்ஜோதியின் அருளேயாகும்.
சாய்ராம்.

Leave a comment