“மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:81)
இடைவிடாத எண்ண அலைகள்,பஞ்ச இந்திரியங்கள் ஆகிய மெய், வாய், கண், காது, மூக்கு, மற்றும் காலம் வெளி முதலியவைகள் மனதின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கருவிகள்.
எண்ணங்கள் அற்ற, பஞ்ச இந்திரியங்கள் இல்லாத,
கால வெளி அற்ற, பேராற்றல் கொண்ட அருள்ஜோதியே மதாதீத வெளியாம்.
மனதின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இக் கருவிகள் இயங்க ஒளியாக இருக்கும் அருள்ஜோதியை, இம் மனதினை கொண்டே அவ் அருள்வெளியை அறிய முயல்வது என்பது யாவர்க்கும் இயலாத ஒன்று.
மாறாக,புறத்தில் உள்ள கால வெளியினில் இவ்வுடல் இயங்குவதாக
அனாதியாய் சிற்சபையில் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றல் அதுவே வெளிப்பட்டு, இவ்வுடம்பை ஆட்கொண்டு பொன்னுடம்பாக்கி, இறவா வரத்தை அளித்தருளும்.
“என்னையும் பணிகொண்டு இறவா வரம் அளித்து
அன்னையில் உவந்த அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:125)
#6/001:2 பரசிவ வணக்கம்.
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் எம் கோவே – துன்று மல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம்.
சாய்ராம்.


