You Are That! -“Energy converter”

“எவையெலாம் எவைஎலாம் ஈண்டின ஈண்டின

அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:781)

ஈண்டின: என்பதிற்கு கூடுதல் என்று பொருள் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் ஒன்றையொன்று ஈண்டிக்கொண்டே இருப்பதால்தான் படைப்பு என்னும் நிகழ்வு இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. எனினும் திருவருள் கூடி வரவில்லையாயின் ஈண்டுதலினால் எந்தவொரு பயனும் கிட்டாது.
அதாவது,

-நீரும் நெருப்பும் (கடல்,நதி நீரும், சூரிய வெப்பமும்) கூடுதலால் உருவாகும் நீராவி மேகங்கள்,

-மேகங்கள், குளிர்ந்த காற்று இவைகளின் கூடுதலால் உருவாகும் மழைகள்,

-நீர்(மழை), நிலங்களின் கூடுதலால் விளையும் உணவுப் பயிர்கள்,

-உணவின் மூலம் தோன்றிய ஜீவராசிகள் ஒன்றையொன்று கூடுதலால் ஏற்படும் இனப்பெருக்கங்கள், போன்ற இவை யாவுமே அருட்பெருஞ்ஜோதியின் திருவருளின் கூட்டினாலேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இவ் அருள் கூடாமல் போயின்?

-மழை பொழிய காரணமான மேகக்கூட்டங்கள் ஈண்டினாலும் உருவாகாது,

-உணவுப் பயிர்கள் விளைய காரணமான மழை ஈண்டினாலும் பொழியாது,

-உயிர்கள் உருவாக காரணமான உணவுப் பயிர்கள் ஈண்டினாலும் விளையாது,

-இனப்பெருக்கங்களுக்கு காரணமான ஜீவராசிகள் ஒன்றையொன்று ஈண்டினாலும் இனம் தோன்றாது போய்விடும்.
சாய்ராம்.

Leave a comment