“ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்
அற்றனெ வகுத்த அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:647)
வேற்றுமை: சாதி, மதம்,மொழி, இனம், அந்தஸ்து,தேசம் போன்ற இவைகளின் தன்மையால், ஒவ்வொன்றையும் தனித்தனி பெயர் கொண்ட வடிவங்களாக காட்டி, வேற்றுமை நிறைந்ததாக வெளிப்படுத்துவதும்!
ஒற்றுமை: சன்மார்க்கம் என்னும் ஞானநெறி மூலம்
சாதி, மதம்,மொழி, இனம், அந்தஸ்து,தேசம் போன்ற இவைகளின் தன்மைகளை அற்றுப் போகச் செய்து, அருள்ஜோதி ஒன்றே தேவனாக,
உரிமைகள்: வேற்றுமை, ஒற்றுமை என்னும் இவ்விரண்டையும் கடந்த வடிவங்கள் அற்ற நிலையில், ஓர்உரு ஆக்கி உரிமைகளை நிலைநாட்டுவதும் அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றலே!!!
“உரிமையால் யானும் நீயும்
ஒன்றெனக் கலந்து கொண்ட
ஒருமையை நினைக்கின் றேன்”
(#6/058:10 கைம்மாறின்மை)
“அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்
ஓர்உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்” (அகவல்:1570)
சாய்ராம்.


