You Are That! -“Formless and Nameless”

“எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென

அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:257)

ஒவ்வொரு மானிட தேகமும்…

“நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம்” இப்படி எட்டு விதமாக பிரிவு பட்டிருக்கிறது. இது கீழான பிரகிருதி, இதுவே தனித்தனியாக காணும் உருவ அமைப்புக்களின் மூலம்.
இதினின்று வேறானதும், ‘உயிர்’ ஆவதுமாகிய மேலான பிரகிருதி, உள்மூச்சு,வெளிமூச்சு “என எட்டினுள் இரண்டாக பிளவுபட்டு” இயங்கிக்கொண்டிருக்கிறது.
உயிர்கள் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து தோன்றியவையே. ஜகத் எனப்படுவதும் இதுவே. எண்கோண வடிவ சக்ரத்துக்குள் இடைவிடாது எப்போதும் நின்று அருள்புரியும் அருட்பெருஞ்ஜோதி, இவ் ஜகத் முழுவதன் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணம்.
அதாவது ஜோதியால் ‘எட்டு இரண்டு என்பனவாக’ தோன்றிய இவ்விரண்டு பிரகிருதியை, தனித்தனி பெயருடன் கூடிய மானுட சரீரமாக காணும் அஞ்ஞான இருளை நீக்கினால், எண்கோண வடிவ சக்ரத்துக்குள் மறைந்து இருக்கும் அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசம் இவ்-எட்டு இரண்டு முழுவதையுமே வியாபிப்பதை உணர்ந்து ஜோதியுள் ஜோதியாகலாம்!

“இயலும் முற்படி என்பதுவும் இதுவேயாகும்”.
“எட்டிரண்டு அறிவித்து எனைத்தனி ஏற்றிப்

பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே”

(அகவல்:1131)

மகான் ஷ்ரிடி சாய்பாபாவின் உபதேசம்:
“நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதேபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும். இதை உணர்ந்ததுகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னை காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வவியாபாகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்”.


சாய்ராம்.

Leave a comment