You Are That! -” intuitively doer “

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்”. (குறள்: 505)
மெய்ப்பொருள்:

இக்குறளில் வள்ளுவர்பிரான் ‘பெருமைக்கும்’ என்பதினை ஒருமையிலும், ஏனைச் சிறுமைக்கும்’ என்பதினை பன்மையிலும் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு செயலால் ஒருவரின் உள்ளம் நிறைவு பெற்று, ஏனையோர் புகழ்ச்சி இன்றி தனக்குத் தானே ‘பெருமை’ கொள்கின்றதோ! அதுவே உண்மையான பெருமையாகும். மேலும் இப்-பெருமையை
இச்-செயலுக்குரியவர் தவிர ஏனையோர் உணர இயலாது ஆதலின் வள்ளுவர் பெருமான் இப் -பெருமையை ஒருமையில் குறிப்பிட்டுள்ளார். இப்-பெருமைக்குரிய செயல்களுக்கு அவரவர்களின் உள்ளமே கட்டளைக்கல்லாக இருந்து செயல்படுகிறது.

இக்குறளின் கருத்துக்கேற்ப வள்ளல் பெருமானும்
தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,

“பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருள்நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி”
அதாவது இத்தகையோரினால் உணரப்படும் பெருமையில், பெருமையென்னும் கட்டளைக்கல்லாக, எண்ணங்களாக, அவரவர்களின் உள்ளுணர்வாக இருந்துகொண்டிருப்பது அருட்பெருஞ்ஜோதியின் அருள்நிலையே என்று பாடியுள்ளார்.

அதாவது இத்தகையோரினால் உணரப்படும் பெருமையில், பெருமையென்னும் கட்டளைக்கல்லாக, எண்ணங்களாக, அவரவர்களின் உள்ளுணர்வாக இருந்துகொண்டிருப்பது அருட்பெருஞ்ஜோதியின் அருள்நிலையே என்று பாடியுள்ளார்.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”.
என்பது வள்ளுவரின் மற்றொரு குறள். அதாவது நினைப்பவனின் நினைக்கும் சக்தியாக அவரவர் உள்ளத்தில் உள்ளுணர்வாக, விளங்கிக் கொண்டிருப்பது அருட்பெருஞ்ஜோதியின் அருள்நிலையே ஆகும். ஆகையால் இத்தகைய உள்ளுணர்வு ஒருவர் தம் உள்ளத்திலிருந்து எண்ணங்களாக வெளிப்படுவதை உணர்வது என்பதே பெருமைக்குரிய ஒன்றாகும். ஆகவே இஃதினையே அருள்நிலையின் கட்டளையாகவே எண்ணக்கூடியவர்களுக்கு பயமற்ற துணிவும், அவ்வாறு துணிந்து செய்யும் கருமங்களில் சிறுமையற்ற பெருமையும் நிச்சயம் கிட்டும்.
இவ்வாறாக விளங்கும் அருள்நிலையின் இவ்- உள்ளுணர்வை தம்முள் உணர இயலாதவர்கள், ஏனையோர் கொடுக்கும் உணர்வுகளின் வாயிலாக துணிந்து செய்யும் கருமங்களில் ஏற்படும் பெருமைகள் நாளடைவில் சிறுகச்சிறுக சிறுமையடைந்து போய்விடும். அதன்பின் தம் அருள்நிலையின் உள்ளுணர்வை எண்ணுவதற்கு முயல்வது என்பது மிகவும் இழிவான செயலாகும்.
சாய்ராம்.

Leave a comment