You Are That! -“Inconceivable”

“படிமுடி கடந்தனை பார் இதுபார் என

அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:261)

‘படி’ என்பதிற்கு வாசி(மூச்சு) என்றும் ஒரு பொருள் உள்ளது.

‘படிமுடி’ என்பதனை ‘வாசியின் முடிவு அல்லது அந்தம்’ என்று
பொருள் கொள்ளலாம்.
அதாவது அயனும் மாலும் காணா அடிமுடியினை காண!


படிமுடி கடந்தனை: வாசியின் முடிவை கடந்து என்னைப் பார்!

வாசியின் முடிவே, ஆதியும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ்ஜோதியின் ஆதிவடிவம்.
இங்கு ‘பார்’ என்னும் சொல்லை அடுக்குத் தொடராக

இருமுறை வள்ளல் பெருமான் பயன்படுத்தியுள்ளார்.

ஏனெனில் அயனும் மாலும் காண இயலாத அடிமுடியை,

படிமுடி கடந்து( வாசியின் முடிவை கடந்து) ஒருசேர பார்ப்பது என்பது

நினைத்துப் பார்க்க முடியாத அளவு, மிகவும் வியப்புக்குரிய நிகழ்வாதலால்
பார் இதுபார் என’ இருமுறை இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

சாய்ராம்.

Leave a comment