“எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்
அவ்வழிஎனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:201)
“என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடைய அன்பே”
“என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடைய அன்பே”
(அகவல்:1481-1484)
அதாவது ‘மெய்’ என்னும் இவ்வுடம்புக்குள்ளேயே அரும்பி இருக்கும் அருட்பெருஞ்ஜோதியை கண்டு அஃ தினை ‘இம்மெய்’ சென்றடையும் வழியே ‘மெய்வழி’ என்னும் உண்மையான வழியாகும்.
ஆகமம்:
இவ் அருட்பெருஞ்ஜோதியை தம்முள் கண்டு அதன் மெய்வழியில் சென்று
‘வேதாகமம்’ சொல்லிய ‘இம்மெய்வழியை’ எமக்கும் காட்டியருள்க என்று அருட்பெருஞ்ஜோதியிடம் வள்ளல் பெருமான் விண்ணப்பித்து போன்று,
‘அவ்வழியை’ அருளாகப் பெறலாம்.
சாய்ராம்.


