You Are That! -“Inaccessible”

“எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்

அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:287)

எஞ்சேல் உலகினில்: உலகம் என்பது பலவிதமான கேடுடைய குணவடிவம் உடையது. அதாவது ஒரு குணம் மற்றொன்றாக பின் அதுவே வேறாக என்று தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஆசைவடிவம் அது நிறைவேறாத போது நிராசையாக, பின் அதுவே குரோதமாக, துவேஷமாக என்று தொடர்ந்து இடைவிடாது மாறிக்கொண்டே இருப்பதையே எஞ்சேல் உலகினில்’

என்று வள்ளல் பெருமான் குறிப்பிட்டுள்ளார். மேலும் இக்-குணங்கள் யாவுமே பஞ்சபூத சம்பந்தமான உருவை பற்றியே நிற்க்கும்.
எனினும் அருள் வடிவான அருட்பெருஞ்ஜோதி ஒளி பொருந்தியது, எதையும் ஊடுருவி நிற்பது, அனைத்தையும் கடந்து செல்வது, உருவம் அற்றது, எந்தவொரு உருவத்தாலும் பற்றப்படாதது.அஞ்சேல்’ என அருட்பெருஞ்ஜோதியின் அருள் சித்திக்கின், அத்தேகத்தை கேடு விளைவிக்கும் எந்தவொரு குணமும் எக்காலத்திலும் பற்றி நிற்க இயலாது போய்விடும். ஏனெனில் குணங்களால் ஒளியுருவை பற்ற இயலவே இயலாது.

“சித்திஎன்பது நிலைசேர்ந்த அநுபவம்

அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:251)

சாய்ராம்.

Leave a comment