You Are That! -“Beyond Imagination”

 “The true sign of intelligence is not knowledge but imagination.” – Albert Einstein 

புத்திசாலித்தனத்தின் உண்மையான அடையாளம் அறிவு அல்ல, கற்பனை.

கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர்
அற்புதச் சிற்சபை அருட்பெரும்ஜோதி” (அகவல்:105)

இப்பிரபஞ்சம் முழுவதுமேபெயர் மற்றும் உருவம்என்னும் இவ்விரண்டிற்குள்ளேயே அடங்கப் பெற்றுள்ளது. அதாவது அசையும் பொருள், அசையாப் பொருள், கண்களுக்குப் புலப்படுவது, கண்களுக்குப் புலனாகாதது என்னும் இவைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு காரணப் பெயரையும், காரண சரீரத்தையும் பற்றியே நிற்கிறது.
தோன்றித் தோன்றி மறையும் தன்மை கொண்ட இவைகளுக்கு இடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் காணும் காட்சிகள் யாவுமே,கற்பனையே அன்றி வேறு ஏதுமில்லை. ஏனெனில் இப்பெயர்களும் உருவங்களும் தோன்றும்போது, ஒன்றையொன்று சுட்டிக் காண்பிப்பதற்காகவே பயன்படுபவையே அன்றி, வாஸ்துவத்தில் தோற்றத்திற்கு அப்பால் இவை முழுவதுமே கற்பனைகளேயாம்.

இத்தகைய கற்பனை நிறைந்த பெயர் மற்றும் வடிவம் முழுவதையும் கடந்து நிற்கும் நிலையில், சிற்சபையில் சுயமாக ஒளிரும் அந்த தூய அறிவொளியை, அற்புத அருட்பெருஞ்ஜோதியை, ஒவ்வொருவரும் தம் கற்பனை முழுவதும் கடந்த நிலையில், தம் சுயஅனுபவ மூலமாகத்தான் அறிய இயலுமே தவிர, புத்திசாலித்தனத்தால் அறிய முயல்வதோ அல்லது சுட்டிக்காண்பிக்கப்பட்டு அறிந்து கொள்வது என்பதோ யாவர்க்கும் இயலாத ஒன்று.

சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளிஎனும்
அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:73)

சாய்ராம்.

Leave a comment