You Are That! -“deserving for grace”

“பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி”  
(அகவல்:151) 


எவ்வாறு ஒரே வஸ்து பெரியதாயும், அதுவே சிறியதாயும் மற்றும் 
அரியதாயும் இருக்க இயலும்?
உவமானப் பொருளாக ‘கடலை’ எடுத்துக் கொள்ளலாம். கடலில் உள்ள ஒரே மூலப் பொருள் நீர். இன்-நீரினை கடலாக காணும் போது பரந்து விரிந்து பெரியதாகவும், ஓர் அலையாக காணும் போது மிகச் சுருங்கிய அளவில் சிறியதாகவும், மற்றும் மேற்பரப்பில் தெரியும் இவ்விரண்டையும் விடுத்து நீரின் உள் ஆழத்துக்கு செல்லும்போது அரிதிலும் அரிதான முத்துக்களையும் காண முடியும். 
அது போன்றே…  
“எண்தர முடியாது இலங்கிய பற்பல
அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ்ஜோதி” (225)
இப்போது நாம் உள்ள பால்வெளி அண்டம் போன்று, எண்ணிக்கையில் 
அடங்காத அண்டங்கள் அனைத்தையும் ஒளிரச் செய்கின்ற ஒரே 
மூல வஸ்துவான அருட்பெருஞ்ஜோதி அண்டங்களாக ஒலிக்கும் 
போது ‘பெரிதினும் பெரிதாகவும்’, 
“பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பராபர மணியே”
அகவல் (1293)
தாயின்(பிண்டத்தின்)வயிற்றில் கருவாக ஓர் அணுவாக (பிண்டமாக) 
உற்பத்தியாகி ஒலிக்கும் தருணத்தில் ‘சிறிதினும் சிறிதாகவும்’ விளங்கும்
“பேரருட் ஜோதியுள் ஜோதி-அண்ட
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
வாரமுற் றோங்கிய ஜோதி-,மன
வாக்குக் கெட்டாததோர் மாமணி 
ஜோதி. சிவசிவ” 
அண்ட பிண்டங்கள் எல்லாவற்றிலும் ஒலிக்கும், மனம் வாக்கிற்கு எட்டாத ஜோதியுள் ஜோதியின் பேரருளை, சுத்த சிவ ஜோதியின் பேரருளை பெறுவது யாவர்க்கும் ‘அரிதினும் அரிதாம்’ 
சாய்ராம்.

Leave a comment