You Are That! -“Ever together”

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்”.(குறள்:394)

பொதுப்பொருள்:

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று )

வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

மெய்ப்பொருள்:
“கூடிப் பிரியேல்” என்பது அவ்வையின் ஆத்திச்சூடி.

கிடைத்ததை பகிர்ந்துகொண்டு கூடி வாழ்வதே மனித இயல்பு.

பொதுவாக இஃது ஏனையொருக்கு அவர்கள் தம் உள்ளத்தில் மகிழ்வை அளித்தாலும், ஞானியர்கள் (புலவர் என்பதிர்க்கு ஞானிகள் என்றும் ஒரு பொருள் உள்ளது) தம் உள்ளத்தில் அம்-மகிழ்வை ஏற்றுக் கொள்ளாமல் அதனிடமிருந்து ‘பிரிந்தே’ இருப்பார்கள்.
ஏனெனில் மகிழ்வை துன்பமாகவும், துன்பத்தை மகிழ்வாகவும், மாறி மாறி காட்டிக்கொண்டே இருப்பதுதான் மனித உள்ளத்தின் இயல்பு. அதாவது கூடிப் பழகுவதை மகிழ்வாக பிரதிபலிக்கும் இவ்-உள்ளம், காலப்போக்கில் அஃதினையே காரணம் காட்டி துன்பமாகவும் பிரதிபலித்து, கூடிப்பழக இயலாமலேயே செய்துவிடும்.
ஆகவேதான் இஃதினை உணர்ந்த புலவர் என்னும் ஞானிகள், கூடி வாழ்ந்தாலும் தம் உள்ளத்தில் மகிழ்வுக்கு இடம் கொடுக்காமல் அதனிடமிருந்து ‘பிரிந்தே’ இருப்பார்கள். அதன் காரணம் துன்பமும் அவர்கள் உள்ளத்தை ஆக்கிரமிக்க இயலாது போக கூடிப் பிரியாமலேயே’ வாழ்வார்கள் என்பதாக பொருள் கொள்ளலாம்.

Sufi Saint Hazarth Khalil Gibran says :
“But let there be spaces in your togetherness and let the winds of the heavens dance between you. Love one another but make not a bond of love: let it rather be a moving sea between the shores of your souls.”
சாய்ராம்.

Leave a comment