“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்”. (குறள்:33)
பொதுப்பொருள்:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
ஒல்லும்: என்பதிற்கு ‘பொருந்துதல்’ என்றும்,
ஓவாதே: என்பதிற்கு ‘நீங்காமை’ என்றும்,
வாய்: என்பதிற்கு ‘வாக்கு அல்லது சொல்’ என்றும்,
பொருள் கொள்ளலாம்.
ஒருவர் தம் சொல்லும், செயலும் ஒன்றை விட்டு ஒன்று நீங்காமல் எப்போதும் பொருந்திய வகையில், எங்கு சென்று எதை செய்தாலும் அவை அனைத்தும் அறவழி செயல்களே ஆகும். மாறாக சொல்லும் செயலும் ஒன்றுக்கொன்று பொருந்தாது, ஒன்றை விட்டு ஒன்று நீங்கிய தன்மையில்,எங்கு சென்று எதை செய்தாலும் அவை அனைத்தும் அறவழிக்கு புறம்பான செயல்களே ஆகும் என்பதாக பொருள் கொள்ளலாம்.


