You Are That! – ” invisible bulwark”

“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்”. (குறள்:744)

பொதுப்பொருள்:காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

மெய்ப்பொருள்:
காமம், குரோதம்,துவேஷம்,லோபம், மோகம், மதம், மாத்சரியம், என்னும் இவ் ஏழு குணங்கள்தான் ஒவ்வொரு மனிதர்களுக்குளேயும், கண்களுக்கு புலனாகாமல், மறைந்திருந்து தாக்கக்கூடிய பகைவர்கள்.

“அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்பது அவ்வையாரின் வாக்கு. இப்படி பெறப்பட்ட அரிதிலும் அரிதான மானுட தேகத்தை, சுவடே தெரியாமல் அழிக்கவல்ல, கண்களுக்கு புலப்படாத இவ் ஏழு குணமயமான கொடிய பகைவர்களிடமிருந்து இத்தேகத்தை காக்க…
அதே போன்ற கண்களுக்கு புலப்படாத என்குணத்தானாய்
அணு வடிவாக, இத்தேகத்துக்குள்ளேயே ஒளிர்ந்து கொண்டிருக்கும் ‘அன்பு’ என்னும் ‘சிவத்தை’ முறையாக அறிந்து காக்கப்பட்டால்…
‘அவ்வன்பு’ மிகச்சிறந்த அரணாக இருந்து எதிர்த்துவந்த இவ்- ஏழு பகைவரிருடைய ஊக்கத்தை அழித்து, பெறப்பட்ட அரிதிலும் அரிதான இம்மானுட தேகத்தை ‘அழியா வாய்மை உடம்பாக்கி’ அன்பே சிவமாக அதில் அமர்ந்து இருக்கும் என்பதாக பொருள் கொள்ளலாம்.
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
அரும்பெருஞ் சித்தரே வாரீர்
அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்.

அருட்பரகாச வள்ளலார்.
சாய்ராம்.

Leave a comment