“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”. (குறள்:28)
பொதுப்பொருள்:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
நிறை: என்பதற்கு பூர்த்தி, அறிவு மற்றும் அழிவின்மை
என்று பொருள் உள்ளது. இத்தகைய பொருள் கொண்ட
‘நிறைமொழி’ என்பது வார்த்தையை பயன்படுத்தாத ஓர் சொல். ஆகவே உலக வழக்கில் பேசப்படும் எதை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் இத்தகைய ‘நிறைமொழி மாந்தர்கள்’ என்பவர்கள் எங்கும் உண்டு.
“THERE IS A VOICE THAT DOESN’T USE WORDS. LISTEN.” —RUMI
“சொற்களை பயன்படுத்தாத ஒரு குரல் உள்ளது”-ரூமி
இத்தகைய ‘நிறைமொழி மாந்தர்கள்’ காலத்தின் கட்டாயத்தில் உலகத்தார் பார்வையிலிருந்து மறைந்தாலும், அவர்கள் மரணமில்லா பெருவாழ்வு பெற்றவர்களே. “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்னும் வள்ளுவரின் மற்றொரு குறளுக்கு ஒப்ப அமரத்துவம் அடையப்பெற்றவர்களே.
ஆகவேதான் இத்தகைய ‘நிறைமொழி மாந்தர்கள்’ அடங்கியுள்ள நிலத்திற்கு சென்று வழிபடும் தருணம் எவராயினும் அத்தகையவர்க்கு எவ்வித முயற்சியும் இன்றி இயல்பாகவே மனம் அமைதி பெற்று அங்கு சாந்தி நிலவுகிறது. இத்தகைய மனஅமைதியைதான் ‘மறைமொழி’ என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
மறை:என்பதற்கு ‘இரகசியம்’ என்று பொருள் உண்டு.
அதாவது மனஅமைதியை பெற்றவருக்கும், அஃதினை காட்டி அருளியவருக்கும் இடையில் உருவான இம்-மொழி ஏனையோர் அறியவோ அல்லது கேட்கவோ இயலாது என்பதால் இஃது மறைமொழி என்னும் இரகசிய மொழியே ஆகும் என்பதாக பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்.


