“அறிகொன்று அறியான் எனினும் உறுதி. உழையிருந்தான் கூறல் கடன்”.(குறள் 638)
பொதுப்பொருள்:
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும்.
மெய்ப்பொருள்:
மனத்தினால் வடிவமிக்கப்பட்ட ஒவ்வொரு மனித உருவும்
‘அரசனுக்கு’ ஒப்பானதுதான். இத்தேகத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் புத்தி ‘அமைச்சனுக்கு’ ஒப்பானது. மனம் சஞ்சலம் உடையது, தடுமாறும் தன்மை கொண்டது. எவ்வளவுதான் ‘அமைச்சருக்கு’ ஒப்பான புத்தி அறிவுறுத்தினாலும், மனம் புத்தியின் அறிவுரையை ஏற்காது தானும் அறியாதவனாகவே இருந்து, தன்(மனம்) போக்கில் ஐம்புலன்களையும் தவறான வழியில் வழி நடத்திக்கொண்டுக் கொண்டேயிருக்கும்.
‘அரசனுக்கு’ ஒப்பான சஞ்சலம் நிறைந்த மனத்தினையும், ஐம்புலன்களையும் உறுதிமிக்கதாய் மாற்ற இடைவிடாது முயன்று கொண்டேயிருக்கும்.
புத்திமான் பலவான் ஆவான்” என்னும் பழமொழிக்கேற்ப
புத்தி என்னும் இவ் அமைச்சரின் அறிவுரைப்படி செயல்படும் அனைத்து செயல்பாடுகளும் எக்காலத்தும் எவர்க்கும் நன்மை அளிக்கக்கூடியதாகவே இருக்கும்.
சாய்ராம்.


