“உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.”
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்:குறள் 105
பொதுப்பொருள்:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
மெய்ப்பொருள்:
‘உதவி செயப்பட்டார்’ என்பதற்கு உதவி செய்தவர் மற்றும்
செயப்பட்ட அவ்-உதவியை பெற்றவர் என்னும் இருவரையும் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம்.
எவரொருவருக்கு தாம் செய்த உதவியை அக்கணமே மறக்க இயலுமோ, அத்தகையவர்க்கு கைமாறு கருதும் எண்ணமும் மனதில் எழவே எழாது. இதுவே உதவி செய்தவரின் உயர்ந்த பண்பாக கொள்ளலாம்.
அது போன்றே பெற்ற அவ்-உதவியை இறுதிவரை தம் நினைவில் நிறுத்திக்கொண்டு, தருணம் வாய்க்கும் போதெல்லாம் தக்க கைமாறு செய்வதே உதவி பெறப்பட்டவரின் உயர்ந்த பண்பாக கொள்ளலாம்.
அது போன்றே பெற்ற அவ்-உதவியை இறுதிவரை தம் நினைவில் நிறுத்திக்கொண்டு, தருணம் வாய்க்கும் போதெல்லாம் தக்க கைமாறு செய்வதே உதவி பெறப்பட்டவரின் உயர்ந்த பண்பாக கொள்ளலாம்.
இவ்வாறாக உதவி செய்பவர் மற்றும் உதவி பெறுபவர்
என்னும் இருவரின் பண்புகளையும், உதவியின் அளவுகோளாக இக்குறள் மூலம் வள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.
என்னும் இருவரின் பண்புகளையும், உதவியின் அளவுகோளாக இக்குறள் மூலம் வள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.
சாய்ராம்.