You Are That! – “shapeless”

“உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய

அபய சிற்ச்சபையில் அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்(77)

‘உபயம்’ என்பது இரண்டு என்னும் சொல்லை குறிப்பது. ஒரு நாணயத்துக்கு வெவ்வேறு உருவங்கள் பொறித்த இரண்டு பக்கங்கள் இருப்பினும், அதன் மதிப்பில் இரண்டும் மறைந்து ஒன்றாய் ஆகிவிடுவது போன்று,

தம் தேகம் முன்புறம், பின்புறம் என்று இரு வெவ்வேறு வடிவில், உபய- இரண்டு பக்கங்களாக இருப்பினும், தம் இரு புருவ மத்தியில் உள்ள சிற்ச்சபையில், நிறைந்த ஒளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி…

தம் தேகத்தின் உபய பக்கங்களுக்கு அபயம் அளித்து ஒளியுறுவாக்கி, ஒன்றெனக் காட்டி அருளிய அருட்பெருஞ்ஜோதி என்பதாக வள்ளல் பெருமான் பாடியுள்ளார்.

“ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை

அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி”(21)

சாய்ராம்.

Leave a comment