You Are That! – “Honest Eyes”

“நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால். கண்ணல்லது இல்லை பிற”.
அதிகாரம் : குறிப்பறிதல்: குறள் 710
மெய்ப்பொருள்:

பிறர் மனக்கருத்தை அளந்து அறிய உதவும் கருவி அத்தகையவரின் கண்களேயன்றி வேறு இல்லை. எவ்வாறெனின் கண்கள் தவிர மற்ற உறுப்புகள் மனக்கருத்துக்கு மாறாக இயங்கினாலும், கண்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது மனக்கருத்தை உள்ளது உள்ளபடியே பிரதிபலிக்கும்.
அதுபோன்றே பிறர் மனக்கருத்தை அளந்து அறிய முற்படுபவருக்கும், அத்தகையவரின் கண்களிலிருந்து வெளிப்படும் ஒளியினை நேருக்குநேர் தம் கண்களால் கண்டு கிரகிக்கும் திறன் கொண்டிருப்பின், அவர்தம் மனக்கருத்தை உள்ளது உள்ளபடியே உணர இயலும். ஆயினும் இத்திறனின் முழு ஆற்றலானது கிரகிப்பவர் உள்ளத்தில் உண்மை மட்டுமே இருந்தால்தான் சாத்தியமாகும்.

அதாவது ஒருவர் தம் மனதில் தோன்றும் உண்மையான கருத்தை மற்ற புலன்கள் வழியே வெளிப்படுவதை மறைத்தாலும், அவரின் கண்கள் வழியே வெளிப்படுவதை மறைக்க இயலாது. அது போன்றே,

பிறர் மனக்கருத்தை அறிய முயல்பவருக்கும் அவர் தம் கண்கள் தவிர மற்ற புலன்கள் வழியே நுண்ணியமாக அறிய இயலாது.
வாழ்க தமிழ்🙏 வாழ்க வள்ளுவம்🙏

Leave a comment