You Are That! – “pure consciousness”

“உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்(317)

உருவம், பஞ்சபூத சம்பந்தம் கொண்ட மானுட வடிவமாக
விழிப்பு நிலையில் மட்டுமே அறியப்படுகிறது.

அருவம், பஞ்சபூத சம்பந்தம் இல்லாத ஆழ்ந்த உறக்க நிலையில் மட்டுமே உணரப்படுவது.

உபயம், உருவ மற்றும் அருவத்தின் கலவை. இஃதினில் பஞ்சபூத சம்பந்தம் கொண்ட உருவமும் மறைந்து, அருவமும் மறைந்து, உருஅரு வடிவாக கனவு நிலையில் மட்டுமே அறியப்படுவது.

விழிப்பு,உறக்கம், கனவு மூன்றும் அற்ற துரிய நிலையிலேயே,

அதாவது உருவமும், அருவமும், உபயமும் ஒன்றாகிய நிலையிலேயே அருட்பெருஞ்ஜோதியின் அருள்நிலை வெளிப்படும். “தெரித்த” என்பதற்கு வெளிப்படுதல் என்று பொருள் உள்ளது. அஃதின்றி தனித்தனி நிலையில் அருட்பெருஞ்ஜோதியின் அருள்நிலை வெளிப்படாது.

“துரியமும் கடந்த சுக பூரணம்தரும்

அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி” (65)
சாய்ராம்.

Leave a comment