“கடலவை அனைத்தும் கரையின்றி நிலையுற அடலனல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்(613)
ஏரி, குளம்,ஆறு போன்ற நீர் நிலைகள் யாவும் கரையின்றி அமையாது. அவ்வாறு இருக்க இப்புவியில் 70% அளவிற்கு கடல் நீர் சூழ்ந்து இருந்தாலும், நிலப்பரப்புக்கும் கடலுக்கும் இடையில் எந்தவொரு ‘கரையின்றி நிலையுற’,
அடல் என்பதிர்க்கு வலிமை என்றும், அனல் என்பதிர்க்கு கொடிவேலி என்றும் பொருள் உள்ளது. எனவே ‘அடலனல்’ என்பதை வலிமையான கொடி போன்ற வேலி என பொருள் கொள்ளலாம்.
அதாவது கடலுக்கும் நிலப்பரப்புக்கும் இடையில் எந்தவொரு ‘கரையின்றி நிலையுற’, புறக்கண்களுக்கு புலனாகாத வலிமையான கொடி போன்ற வேலியை அமைத்து எவ்வாறு நிலப்பரப்பு காக்கப்படுகின்றதோ!
அவ்வாறே இம்மானுட தேகம் நவத்துவாரங்களையும், எண்ணற்ற நுண்ணிய மயிர் கால்களை உடைய துவாரங்களை கொண்டிருப்பினும், இம்மானுட தேகத்தில் சூழ்ந்து இருக்கும் 70% நீரின் சக்தி ‘கரையின்றி நிலையுற’, ‘அடலனல்’ அமைத்து ஒவ்வொரு மானுட தேகத்தையும் காத்தருளும் அருட்பெருஞ்ஜோதி!!
“நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”!!!
சாய்ராம்.


