“சாவா நிலை இதுதந்தனம் உனக்கே
ஆவா என அருள் அருட்பெருஞ்ஜோதி”
‘சாகும் நிலை’ என்பது உடலை விட்டு உயிர் பிரிந்தது செல்வதே. அவ்வாறாயின் ‘சாவா நிலை’ என்பது உடலை விட்டு உயிர் பிரியாத நிலையே என்று பொருள் கொள்ளலாம். அதாவது இம்-மெய்யுடன் (உடம்புடன்) இவ்-உயிர் கலந்து நிற்பதே ஆகும்.
‘ஆவா’ என, ஆவா என்பதற்கு இரக்க வியப்பு, ஆனந்த குறிப்பு என்று பொருள் உள்ளது. அதாவது அருளின் இரக்கதின் வியப்பாக, ஆனந்த்தத்தின் குறிப்பாக தமக்கு தந்தருளவேண்டும் அருட்பெருஞ்ஜோதி என்னும் பொருள்பட வள்ளல் பெருமான் பாடியுள்ளார்.


