“வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்
ஐயறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல் (203)
‘ஐயம்’ என்பதற்கு ‘அகப்பொருள்’ என்றும் ஒரு பொருள் உள்ளது. எனவே ‘ஐயறிவு’ என்பதை அகப்பொருளை (மெய்ப்பொருளை) அறியும் அறிவு என்பதாக பொருள் கொள்ளலாம்.
அதாவது ‘ஐயறிவு’ என்னும் தம் ஐம்புலன்களின் அறிவால் தம் அகத்துனுள் பிரகாசித்துக் கொண்டிருந்த ஜோதியை, அறியும் அறிவை எனக்கருளிய அருட்பெருஞ்ஜோதி என்றும்,


