You Are That! – “expectation absentee”

“எச்சோ தனைகளும் இயற்றாது எனக்கே ச்சோ என்றருள் அருட்பெருஞ்ஜோதி”. அருட்பெருஞ்ஜோதி அகவல் (309)

‘அச்சோ’ என்பதிர்க்கு ஒரு வியப்புக்குரிய இரக்கமுள்ள செயல்

என்று பொருளாகிறது.

வாழ்வில் எத்தகைய கடினமான சூழ்நிலைகள் உருவாயினும் அஃதினை தமக்கு ஏற்ப்பட்ட சோதனைகளாக கருதாமல், மாறாக அஃதினை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஒருவருக்கு அருளப்படின் ! எதிர்ப்பார்ப்பு ஏதும் அற்றநிலை கிட்டிடும். அத்தகையவர்க்கே,

அந்நிலையில் கைகூடிவரும் திருவருளானது, அருட்பெருஞ்ஜோதியின் ‘அச்சோ’ என்னும் கற்பனை கடந்த வியப்புக்குரிய, இரக்கமிகுந்த செயலாக காட்சி அளிக்கும் !!
அதாவது ‘திருவருள் வியப்பு’ என்பது ஒருவருக்கு
எதிர்ப்பார்ப்பு ஏதும் அற்ற நிலையில்தான் உருவாகும் !!!

“அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே

கற்பனை கடந்த கருணைமா நிதியே”

அருட்பெருஞ்ஜோதி அகவல் (1379)
சாய்ராம்.

Leave a comment