You Are That! – “emptiness”

“தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி”



எந்தவொரு தோத்திரத்தாலும் புகழத் தெரியாது இருந்தாலும், அருளைக் கண்டறியா பாத்திரமாக இருந்தாலும்..

‘ஆ’ என்பது ஆன்மாவை குறிப்பது,

‘திரம்’ என்பது வீடுபேற்றை குறிக்கும் சொல்.

‘ஆ-திரம்’ இவ் ஆன்மாவிற்கு வீடுபேற்றை அருளும் அருட்பெருஞ்ஜோதி.
ஆங்கிலத்தில் ‘innocent’ என்னும் வார்த்தைக்கு ‘குற்றமற்ற அப்பாவி’ என்று பொருள் உள்ளது. ‘ ignorant ‘ என்னும் வார்த்தைக்கு ‘அறியாமை’ அதாவது அறியும் திறன் இருந்தும் அறிய முற்படாத ‘அறியாமை’ என்று பொருள் கொள்ளலாம்.
இங்கு வள்ளல் பெருமான் குறிப்பிடுவது innocent’ என்னும் ‘குற்றமற்ற அப்பாவியாக’ மட்டுமே இருந்தால்? எந்தவொரு தோத்திரத்தாலும்

புகழத் தெரியாது இருந்தாலும், அருளை கண்டு அறியாத பாத்திரமாக இருந்தாலும், அத்தகையோரிடம் குடிகொண்டுள்ள களங்கமில்லா வெற்றிடம்…
அருட்பெருஞ்ஜோதியின் அருளால் நிரப்பப்பட்டு, அவ் ஆன்மா
வீடுபேற்றை அடையும்.

“என்னையும் பணிகொண் டிறவா வரமளித்

தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி”


சாய்ராம்.

Leave a comment