You Are That! – “contentment in life”

“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.”
வெஃ காமை: குறள்- 171
பொதுப்பொருள்:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.


மெய்ப்பொருள்:

இங்கு வள்ளுவர் குறிப்பிடும் ‘நடுவுநிலைமை’ என்பது,

ஒருவர் தம்மிடம் உள்ளதைக்கொண்டு திருப்தியோடு வாழும் மனநிலையை ( நடுவு நிலையை) உருவாக்கிக்கொள்ள முயலவில்லை எனின்? இயற்கையாகவே அத்தகையவர் மனதினில், தம்மிடம் இல்லாத, ஆனால் பிறருக்கு உரிமையுள்ள நல்ல பொருளை காணும் நிலை ஏற்படும் தருணம்…
ஒருவித அறியாத ஏக்கம் அவருள் உருவெடுக்கும். அந்த ஏக்கம் நாளடைவில் பேராசையாக பெருக்கெடுத்து அப்பொருளை கவர விரும்பும் நிலைக்கு அவனைக்கொண்டு தள்ளிவிடும். அதன் காரணம் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும். ஆகையால் ஆசை, நிராசை இவ்விரண்டும் இல்லாத, திருப்தி என்னும் நடுவுநிலையோடு எப்போதும் வாழ்ந்து வந்தாள், அவனின் குடியும் மேம்பட குற்றமற்றவனாய், நிம்மதியுடன் இருக்கலாம்.

சாய்ராம்.

Leave a comment