You Are That!- “Pure sivam”

“எல்லாம் சிவமயம்”

“தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்”

(அதிகாரம்:தவம் குறள் எண்:268)

பொதுப்பொருள்:
தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று
நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம்
(அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

மெய்ப்பொருள்:

“பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல

உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச் சிவமே”

அருட்பெருஞ்ஜோதி அகவல்: 972

பயிர்ப்பு என்பதற்கு தூய்மையின்மை என்றும்,
கரணம் என்பதற்கு உடம்பு என்றும் பொருள் உள்ளது.
அதாவது தாய், தந்தை மூலம் தூய்மையில்லாத விதவிதமான
முகங்களுடன் வெளிப்படும் உடம்பினுள் குடிகொண்டிருக்கும்
உயிர்த்திரள்கள் யாவும் ஒன்றேயாம், அஃது சிவமேயாம்.
இங்கு வள்ளுவர் குறளின் மெய்ப்பொருளும் இதுவே!
தவவலிமை மேலோங்கிடின், தன்னுடம்புக்கென, தனிஉயிர்
என்று எண்ணிய பற்று விலகி, எல்ல உடம்பினுள்ளும்
குடிகொண்டிருக்கும் உயிர்த்திரள்கள் யாவும் ஒன்றே,
என்னும் மெய்ஞானம் கிட்டும். “எல்லாம் சிவமாய்” காணும்
இத்தகைய மெய்ஞானி காண்பதிற்கு அரிதிலும் அரிது
என்பதால், மற்ற உயிர்கள் எல்லாம்
(அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

சாய்ராம்

Leave a comment