You Are That!- “Excellent diligent”

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்”.

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:602)

பொதுப்பொருள்

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.

மெய்ப்பொருள்:

குடிஎன்பதற்கு வாழிடம் என்றும் பொருள் உண்டு. அதாவது அவரவர் தேகத்தில் குடிகொண்டிருக்கும்உயிர் வாழும் இடம்என்று பொருள் கொள்ளலாம்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”.

என்னும் திருமூலரின் திருமந்திரச் சொல்லுக்கு ஒப்ப, இவ்வுடம்பினுள் குடிகொண்டிருக்கும் இவ்உயிரினை வளர்க்கும் முயற்சியை அறிந்து, இடைவிடாது முயற்சித்தால்,சோம்பல், எம் முயற்சியும் இன்றி சோம்பலாகி விடும் என்பதாக
பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்.

Leave a comment