You Are That!- “spirited”

“உறவினி லுறவும் உறவினிற் பகையும்

அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி”

அருட்பெருஞ்ஜோதி அகவல்

நான் உடல், என்னும் உணர்வு உள்ளவரை மனம் இருக்கும்,

மனம், உள்ள வரை தெளிவும், சந்தேக எண்ணமும் மாறி மாறியே

இருந்துகொண்டு இருக்கும். நம்முள் ஒளிரும் ஜோதி, ப்ரகாசிக்கும்

தருணம் தெளிவு பிறக்கும், அத் தெளிவினில் உறவினில் உறவுகள்

அறனுற (மாசற்று) மிளிரும்.

மாசற்ற ஜோதி மறைக்கப்படின், தெளிவும் மங்க, சந்தேக

எண்ணங்கள் தோன்ற, இருள் என்னும் பயம் மனதை கவ்வ,

அதன் காரணம் மிளர்ந்த உறவினில், பகைமை சூழும்.

இடைவிடாது மாசற்ற அருள்ஜோதி சிந்திக்கப்பட்டால்,

அதன் ப்ரகாசத்தல் மிளிர்ந்த உறவுகளை பகைமை சூழவே சூழாது.

அதாவது உறவுகள் சதா மிளிர்ந்தபடியே இருக்கும்.

“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !!!

Leave a comment