You Are That!- “ப்ராமணீயம்”

ப்ராமணீயம்?
Quote:
பிராமணர்கள் தங்கள் செய்யும் அனைத்து பிரார்த்தனைகளிலும் உலகில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கவே பிரார்த்திப்பான்.சர்வே ஜனா சுகினோபவது: என்பது அவனது பிரார்த்தனை.அதே போல் இறந்தவர்களுக்கும் தன்னாலான பிரார்த்தனையை செய்தே முடிக்கிறான். எப்படி என்றால் ஒவ்வொரு முறை தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக,

“ஏஷாம் ந பிதா ந மாதா ந ப்ராதா ந பந்து நாந்ய கோத்ரிணா:
தே ஸர்வே த்ருப்தி மயாந்து மயோத் க்ருதை: குசோதக:
த்ருப்யத த்ருப்யத த்ருபயத:”
என்று மந்திரம் சொல்லி முடிப்பார்கள்
இதன் அர்த்தம்
‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ இது போன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக் கூடிய அனைவருக்கும் நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை திருப்தியை திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறான்.

Unquote:

பகவான் ரமண மஹரிஷி போன்றோர் எந்த தர்ப்பணம் செய்தார்கள்?

வேத உபநிஷதங்கள் சொல்லிய பிரம்ம ஞானத்தை பெற்று, அவ்வாறு

பெற்றதை, “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும்
சொல்லுக்கு ஒப்ப, எல்லோருக்கும் உபதேசித்தும் உள்ளார்கள்.
அதன் காரணம் இன்றளவும்,அவர் ஸித்தி அடைந்த பின்னரும்
உலகின் மூலை முடுக்கிலிருந்தும் எல்லா தரப்பு மக்களும் வந்து
வணங்கி சாந்தியையும், அருளையும், ஞானத்தையும் அடைந்து
உய்வடைகிறார்கள்.
அதாவது பகவான் ரமணர் போன்றோரின் கருத்துக்களையும்,
உபநிஷத்,ப்ரஹ்ம சூத்திரம், கீதை, ஆதி சங்கரர் பாஷ்யம் போன்ற
ஞான நூல்களின் கருத்துக்களையும் புரிந்து, அறிந்து, அதன்படி
வாழும் திறன் இருந்தும், அவ்வாறு தானும் வாழ்ந்து கொண்டு,
தாம் அறிந்ததை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கும்
திறன் இருந்தும்…
அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சகல ஜனங்களும் உய்வடையும் வகையில், “சர்வே ஜனா சுகினோ பவந்து” என்னும் வேத வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டிய சமூகம்,
கண்களுக்கு புலப்படாத இறந்து போன்றவர்களுக்கு, எவரும்
அறியாவண்ணம் செய்யும் தர்ப்பண மந்திரத்தை கொண்டு
“சர்வே ஜனா சுகினோ பவந்து” என்னும் வேத வாக்கியமாக
ப்ராமணீயம் விளங்குவதாக நிலைநாட்ட முயல்வது விந்தையிலும்
விந்தையாம்!
சாய்ராம்.

Leave a comment