“பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்”.
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:10)
பிறவி,அதாவது மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது
கடல் போல் இருக்கிறது. இஃது எவருக்கு எனின்,
தம் அறியாமையால் பிறவியைபெரும் கடலாகவே
கண்டு, நீந்த முயற்சிக்காமல், அஃதிலேயே மூழ்கி மூழ்கி
தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமேயாம்!
இத்தகைய நீந்தார், இறைவனடி சேராதார்.


