சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே”.
திருஞானசம்பந்தர்
எது மந்திரமாகின்றது ? அதன் தன்மையாது ?
எது இருவேறு தன்மை கொண்ட பொருட்களை ஒன்றேயென தன்மயமாய் கூட்டுவிக்கின்றதோ அதுவே மந்திரமாகின்றது. அக்கூட்டுவித்தலே அதன் தன்மையுமாகும்.
ஆசாரியன் முதல் எழுத்து வடிவம்; சிஷ்யன் பின் எழுத்து வடிவம், வித்தை சந்திக்கும் இடம்; உபதேசம் சந்தியை செய்விப்பது; தைத்திரீயோபநிஷத்து; சீஷாவல்லீ
குரு, சிஷ்யன் இவ்வீறுவரையும் ஒன்றேயென கூட்டுவிப்பது மந்திர உபதேசம். அம்மந்திரத் தொனியில் குரு ,சிஷ்யன் இவர்களின் தனித்துவம் மறைந்து அஷ்ரம் ஒன்றே வியாபித்திருக்கும்.
1.பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னாதமும் (எது உண்கின்றதோ அது அன்னாதம்) ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும். சரீரத்தில் பிராணன் ஒடுங்கி நிற்கும்.இவ்வாறாக அன்னம்
அன்னத்தில் ஒடுங்கி நிற்கின்றது. எவன் இங்ஙனம்
அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ
அவன் நிலையான பதவியை எய்துகிறான்.
2. உணவும் நானே, உண்பவனும் நானே, உணவுக்கும்
உண்பவனுக்கும் உள்ள உறவை (மந்திரத்தை) உண்டாக்கியவனும் நானே! எவன் இங்ஙனம் அறிந்து அன்னரூபியான என்னை (பிராணனை) கொடுக்கின்றானோ அவன் இதனால் ஆத்ம ரஷனம் செய்தவன் ஆகிறான். இங்ஙனம் அறிந்து கொடுக்காவிட்டால் உண்பவனையே(சரீரத்தை) உணவாகிய நான் (பிராணன்) உண்டுவிடுகிறேன்.
தைத்திரீயோபநிஷத்து :பிருகுவல்லீ
ஸத்குருவின் அருளால் மந்திரச்சித்தி கிட்டிடின் பிராணனும் சரீரமும்
அதனதன் தன்மையை இழந்து அஷ்ரத்தில் ஒடுங்கப்பெற்று
சர்வ வியாபகத்துவத்தை அடையும். இதனால் ஆத்ம ரஷனம் செய்தவன் ஆகிறான். இங்ஙனம் அறிந்து கொடுக்காவிட்டால் இறுதிக்காலத்தில் பிராணனால் சரீரசக்திகள் யாவும் கவரப்பட்டு வெளிக்கிளம்பி ஈனப்பிறவியை நோக்கி சென்றடையும்.
சாய்ராம்.


