மடிதற்றுத் தான்முந் துறும்”. குறள் 1023:
என் குடியையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும் என்பது இக்குறளின் பொதுவான பொருள்.
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”. குறள்-340
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
இக்குறள் மூலம் இங்கு வள்ளுவர் கூறும் ‘குடி’என்பதிற்கு அரசனாயினும் ஆண்டியாயினும் அவரவர் உயிரை தாங்கிக்கொண்டிருக்கும் அவரவர்கள்
தேகமே முதன்மையான ‘குடி’ என்பதாக பொருள் கொள்ளலாம். அவ்வாறு உணரப்பெற்ற ‘தம்குடி’ தனை மேன்மை அடையச் செய்தல் என்பது,
“மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்வதே”!
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பது திருமந்திரச் சொல். அதாவது “தெய்வம் மனுஷ ரூபனே’ என்னும் சொல்லிற்கேற்ப உயிருக்கு ‘குடி’ யாய் விளங்கும் இவ்-ஊனுடம்பை ஆலயமாக்கிக் கொள்ள முயல்பவருக்கெல்லாம்…
“என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என்னும் பைபிள் வாசகத்திற்கேற்ப அருளாளர்களால் நிரம்பப்பெற்ற தெய்வசம்பத்து கொண்ட அச்-சமூகம் இத்தகையரீதியில் ‘தம்குடி’ தனை உயர்த்திக்கொள்ள முயல்பவருக்கெல்லாம் முன்னிலும் முன்பாகவே சென்று அம்-முயற்ச்சிதனை ‘திருவினையாக’ மாற்றிவிடும் என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம்.
“ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல் (267)
சாய்ராம்.


