“ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும்
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி“-
(அகவல்:55)
ஆதாரமான நீரில் ‘ஏகம் அனேகம்‘ எனும் இவ்விரண்டுமே மறைந்துபோய் விடுகிறது.
அது போன்றே ‘மெய், வாய், கண்,செவி, நாசி‘ என்னும் பஞ்ச இந்திரியங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு உருவமும் ‘ஏகமே‘ ஆகும். இவ்வைந்து இந்திரியங்கள் வாயிலாக வெளிப்படும் உலகமே ‘அனேகம்‘ ஆகிறது. எனினும் இவ்விரண்டுக்கும் ஆதாரம் அருள்ஜோதியே. இதுவே ஏகமாகவும், அநேகமாகவும் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
ஆதிமூலமான இவ்வருள் ஜோதி ‘வெளியில்‘ ஏகமான தனித்தனி உருவங்களின் தன்மைகளும், அனேகமான உலகத்தின் தன்மைகளும் கரைந்துபோய், அருட்பெருஞ்ஜோதி ஒன்றே சிற்சபையில் தனிப்பெரும் கருணையாக விளங்கிக்கொண்டிருக்கிறது, எனப் பகர்க்கின்றது ஆகமங்கள்.
ஆகவே ஒவ்வொரு தனித்தனி உருவங்களும் தம்முள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆதிமூலமான ஒளியின் ஊடுருவலை உணர்ந்தால்,
ஆகவே ஒவ்வொரு தனித்தனி உருவங்களும் தம்முள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆதிமூலமான ஒளியின் ஊடுருவலை உணர்ந்தால்,
‘ஏகம்‘ எனும் தனித்தனி உருவங்களும், ‘அனேகம்‘ எனும் உலகமும் ஒரே சமயத்தில் மறைய, அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெரும் கருணைக்கு பாத்திரமாகலாம்.
#6/037:6 அருள்விளக்க மாலை“எங்கும் ஒளிமயமாகி நின்றநிலை காட்டிஎன்அகத்தும்மெய்ப்பொருளே
#6/037:6 அருள்விளக்க மாலை“எங்கும் ஒளிமயமாகி நின்றநிலை காட்டிஎன்அகத்தும்மெய்ப்பொருளே