Bible: 1 Corinthians 10:31
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251:
பொதுவான பொருள்:
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”…
என்பது திருமூலரின் திருமந்திரம்.
உணவு உட்கொள்பவர்களை இருவிதமாக வகைப்படுத்தலாம்.
1.தம் உயிரை பற்றிய மெய்ஞ்ஞானத்தை அறியமுற்படாமல் தம் உடம்பை வளர்க்க மட்டுமே உணவை உட்கொள்பவர்கள். இத்தகையோர் தாவரவகை உணவு மட்டுமே உட்கொண்டாலும், அவ்வாறு உண்ணும் உணவில் உருவாகும் உயிர் சக்தியானது…
அவர்தம் உயிரை வளர்க்கும் உபாயமாக மாறததலினால், அதாவது உட்கொள்ளப்பட்ட உணவின் உயிர்சக்தியாவும் முறையான
பயன்பாட்டிற்கு வராமல், சக்தியனைத்தும் உடம்பின் செயல்பாட்டின் மூலமே வெளியேறிவிடுவதால், அங்கு உயிர்சக்தி என்பது சேமிப்பு அற்றதாய் போய்விட்டது. இத்தகையோர் ‘உண்டதெல்லாம் மலமே உட் கொண்டதெல்லாம் குறையே’.
மேலும் இத்தகையோரை ‘கொல்லா நெறிக்கு’
உட்பட்டவர்களாய் கருத இயலாது.
2.மாறாக உயிரை பற்றிய மெய்ஞானம் அறிவிக்கப்பட்டு உயிரை வளர்க்கும் உபாயத்தை அறிந்தவர்கள், தாம் உட்கொள்ளும் உணவில் தாவரவகை அல்லது வேறுவகை என்னும் பாகுபாட்டை ஒருபொழுதும் காணார். கிடைக்கப்பெற்றது எதுவாயினும் அஃதை இறைபிரசாதமாகவே கருதி உட்கொள்வர். ஆதலின் உட்கொண்ட உணவின் உயிர்சக்தி விரையம் ஆகாமல் …
உடம்பும் வளர்ந்து உயிரும் வளர்கிறது. இத்தகையோரே ” கொல்லா நெறியே குருவருள் நெறி” என்னும் நெறிக்கு உட்பட்டவர்கள். அருளுடைமைக்கு ஆட்பட்டவர்களும் இத்தகையோரே!


