“சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை”.
சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
சான்றாண்மை என்னும் குணத்தின் பண்பு யாதெனின் அஃது மனித குலத்தில் யாரிடம் குடிகொண்டிருந்ததாலும், அத்தகையவரை விட்டு எச்சூழழிலும் விலகாது இருத்தலேயாகும். அதாவது சான்றாண்மை மேற்கொள்பவர்கள் ஒருபோதும் இவ்வரிய பண்பு குறைவுபட தாங்கள் காரணமாகமாட்டார்கள்.
இரு என்பதிற்கு இரண்டு என்று பொருள் உண்டு.
நிலம் என்னும் சொல் பூமியை குறிக்கும்.
இருநிலம் என்று இங்கு வள்ளுவர் குறிப்பிடுவது பூமியின் இரு பகுதிகளான நீர் மற்றும் நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களை குறிப்பதாக பொருள் கொள்ளலாம்.
இங்கு வள்ளுவர் பெருமான் கூறவந்தது யாதெனின் இத்தகைய சான்றோர்களின் பண்பினை உணரப்பெறாமல் மாறாக,
அவர்களது சான்றாமைக்கு குந்தகம் ஏற்பட
முயற்ச்சித்தால் ? இரு நிலத்தில் உள்ள உயிரினங்கள் வாழும் தகுதியற்றதாக இப்பூமியானது மாறிவிடும் என எச்சரிக்கிறார்.
அதாவது “நல்லோர்” எனப்படும் இச்-சான்றோர்கள் பொருட்டு பெய்யும் மழையும் பொய்த்துப்போக, அதன் பொருட்டு வறண்டுபோகும் இக்காய்ந்த நிலத்தில், உயிரினங்களும் வாழ அருகதை அற்றதாய் ஆகிவிடும் என்பதாக பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்


