“இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்”.
குறள் 369:
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும் என்பது இக்குறளுக்கு பொதுப்பொருள்.
‘அவா’ என்னும் சொல்லுக்கு ‘பெருவிருப்பம்’ கொள்ளுதல் என்று பொருள். அதாவது ஒரு பொருளின் மீது ஏற்ப்படும் அவா-வானது அஃதினை தன்வயமாக்குதல் என்னும் இலக்கிற்கு உள்ளாக்கி, மனதை இன்பத்தில் திளைக்கச்செய்வதே ஆசையென்னும் அவா-வின் இயல்பாய் இருக்க! மாறாக இங்கு வள்ளுவர் பிரான் ‘அவாவென்னும் துன்பத்துள்’ என்று எவ்வாறு குறிப்பிடுகிறார் ?
எப்போது அவா-வின் தன்வயமாக்கிகொள்ளல் என்னும் இலக்கானது பலமற்றுபோய் மாறாக ‘உள்ளதையும் இழத்தல்’ என்னும் தன்மையுடையதாய் மாறுகிறதோ! அக்கணமே அஃது துன்பக்கடலாய் மாறுகிறது.
எவ்வாறு உப்புக்கடலிலிருந்தே உருவான உப்புப் பதுமையானது தான் உருவான அக்கடலிலேயே கரைந்து மறைந்து போகிறதோ! அவ்வாறே ஆசைக்கடலில் மிதந்த மனிதமனமும் அத் துன்பநிலைக்கிற்குப் பின் உருவாகும் தெளிவினில் தெளிவுபெற, அத்தெளிவினில் மனத்துன்பமும் ‘அவா’ எனும் துன்பக்கடலில் கரைந்து, மறைந்து கெட்டொழிந்து போகிறது.
சாய்ராம்.


