You Are That!- “Unknown, but knowing”

“ஓதி ஒதாமல் உறவு எனக்கு அளித்த

ஆதியீறு இல்லா அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:127)

ஓதி: என்பதற்கு அறிவு என்று ஒரு பொருள் உண்டு.

கேனோபநிஷத்து 1:3ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“அது- ஜோதி அறிந்த பொருட்களைவிட வேறு, அறியாத
பொருள்களுக்கும் அப்பாற்பட்டது”.
ஓதி ஒதாமல் உறவு எனக்கு அளித்த:

அறிந்த பொருட்களைவிட வேறாகவும், அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டதாயும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஜோதியுடன் இரண்டற கலந்திடும் கிடைத்தற்கரிய உறவை எனக்கு அளித்த…

ஆதி ஈறு: ஈறு என்பதற்கு எல்லை என்று பொருள் உண்டு.

ஆதி என்னும் எல்லையே இல்லாத அருட்பெருஞ்ஜோதியே!

ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்

ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:83)
சாய்ராம்.

Leave a comment